தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் கீழத்தெருவில் 09.10.2011 அன்று மாலை 06.30 மணியளவில் தண்ணீர் குன்னம் கிளை தலைவர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது வரவேற்புரை மர்வா சாதிக் கிளை பொருளாளர் உரை நிகழ்த்தினார் இதன்பின் தண்ணீர் குன்னம் உமர்(ரலி) பள்ளி இமாம் முஸ்தாக் அஹம்மது அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும்,மன்னை இமாம் அப்துல் ஹமீது அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சளர் அப்துல் கரீம் அவர்கள் இஸ்லாமும் இளைய சமுதயமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் அதனை தொடர்ந்து மார்க்க அறிவு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முதல் பரிசு மூன்று நபர்களுக்கு ரூ 2000 விகிதம் ரூ 6000 கொடுக்கப்பட்து இரண்டாவது பரிசு வாஷிங்மெஷின் மூன்றாவது பரிசு மின்சாரஅடுப்பு வழங்கப்பட்டது ஆறுதல் பரிசாக 115 நாபர்களுக்கு ஜின்களும் ஷைத்தான்களும் என்ற புத்தகமும் டிபன் கேரியரும் வழங்கப்பட்டது .நன்றியுரை கிளை நிர்வாகி சாகுல் ஹமீது உரை நிகழ்த்தினர்
No comments:
Post a Comment